கோவையில் 5வது தென்னிந்திய குலாலர் இன அரசிதழ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

கோவை செல்வபுரம் பகுதியில் 5வது தென்னிந்திய அளவிலான குலாலர் இன அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த குலாலர் இன மக்களின் வாழ்வாதாரம், சமூக முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை விருந்தினராக தெலுங்கானா மாநில அரசின் துணைப் புள்ளிவிவரப் பிரிவின் ஓய்வுபெற்ற அதிகாரி எட்டிக்கலா வீரையா பிரஜாபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தென்னிந்திய பிரஜாபதி அரசு அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முகவரித் தொகுப்பு – 2026 வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


Coimbatore: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவலாக வாழ்ந்து வரும் குலாலர் இன மக்களை ஒன்றிணைக்கும் வகையில், கோவையில் 5வது தென்னிந்திய அளவிலான குலாலர் இன அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.



தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வாழ்ந்து வரும் குலாலர் இன மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில், கோவை செல்வபுரம் பகுதியில் இந்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. “5வது தென்னிந்திய பிரஜாபதி அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சந்திப்பு – 2026” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் இடம்பெற்றுள்ள குலாலர் இன மக்களை ஒருங்கிணைத்து, அவர்களின் முன்னேற்றத்திற்காக செயல்படும் அமைப்பை உருவாக்கும் நோக்கில் கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.



நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக தெலுங்கானா மாநில அரசின் துணைப் புள்ளிவிவரப் பிரிவின் ஓய்வுபெற்ற அதிகாரி எட்டிக்கலா வீரையா பிரஜாபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், “தென்னிந்திய பிரஜாபதி அரசு அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முகவரித் தொகுப்பு – 2026” வெளியிடப்பட உள்ளதாகவும், இது சமூக மக்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சமூக மக்களிடையே நட்புறவை உருவாக்கி, அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் நடராஜ், ராமமூர்த்தி, இளங்கோ, ஜெயபாலன், சண்முகம், தமிழ்செல்வி, ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...

கோவையில் 5வது தென்னிந்திய குலாலர் இன அரசிதழ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

கோவை செல்வபுரம் பகுதியில் 5வது தென்னிந்திய அளவிலான குலாலர் இன அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களின் க...

கோவையில் கத்திமுனையில் சமையல் மாஸ்டர், சாலையோர வியாபாரி, மெடிக்கல் பிரதிநிதியிடம் வழிப்பறி – மூவர் கைது

கோவையில் ஒரே நாளில் நடந்த மூன்று கத்திமுனை மிரட்டல் கொள்ளை சம்பவங்களில் போலீசார் மூவரை கைது செய்தனர். வடமதுரையில் மெடிக்...