கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பல்வேறு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். கோயமுத்தூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டம், ராஜகோபால் லேஅவுட்டில் டெங்கு கொசு ஒழிப்பு, தூக்கினார் வீதியில் மழைநீர் வடிகால் பணி, என்.ஜி.ஆர். வீதியில் சாலையோர சுத்தம், பாரதி காலனியில் மரக்கழிவு அகற்றுதல் ஆகிய பணிகளை பார்வையிட்டு, ஒப்பந்ததாரர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அவசியமான அறிவுறுத்தல்களை வழங்கினார்.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று காலை பல்வேறு மாநகராட்சி பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பீளமேடு கோயமுத்தூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களிடம் திட்டம் தொடர்பாக கேட்டறிந்தார்.



ராஜகோபால் லேஅவுட் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டதுடன், ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டது. மேலும், தண்ணீர் தொட்டியில் கொசுப்புழுக்கள் உருவாகாமல் தடுக்க அபெட் மருந்து ஊற்றப்பட்டது.



தூக்கினார் வீதி பகுதியில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்த அம்பிகா தனபால், பணிகளின்போது உப்புத் தண்ணீர் குழாய் மற்றும் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படாத வகையில் கவனமாக பணிகளை மேற்கொள்ளுமாறு ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.



என்.ஜி.ஆர். வீதி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியையும் அவர் பார்வையிட்டார். சுத்தம் செய்யப்பட்ட செடிகள் மற்றும் கழிவுகளை ஆங்காங்கே போடாமல் ஒரே இடத்தில் சேகரித்து வைக்குமாறு தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.



மேலும், பாரதி காலனி பிரதான சாலையில் ஸ்ரீ கோபால் நாயுடு பள்ளி முன்பு சாலையோரத்தில் தேங்கியிருந்த மரக்கழிவுகளை அகற்றும் பணியையும் அவர் ஆய்வு செய்தார். பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணியை விரைந்து முடிக்குமாறு தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

Newsletter

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...