இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ் ஏ 2 ஆலோசனைக் கூட்டம் இடையர்பாளையம் அருகே ஜோதிமணி பொன்னையா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் எம் என் கந்தசாமி, மகேஷ் குமார், கே ஈஸ்வரமூர்த்தி, சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 15, 16, 17, 33, 34, 35 ஆகிய வார்டுகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு இயக்க மறு சீரமைப்பு திட்டம் 2 குறித்து கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர். 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ் ஏ 2 ஆலோசனைக் கூட்டம் இடையர்பாளையம் அருகே உள்ள ஜோதிமணி பொன்னையா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 15, 16, 17, 33, 34 மற்றும் 35 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று இயக்க மறு சீரமைப்பு திட்டம் 2 குறித்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் என் கந்தசாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர், மாநில பொதுச்செயலாளர் மகேஷ் குமார், மாவட்டத் துணைத் தலைவர் கே ஈஸ்வரமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சர்க்கிள் தலைவர் பி நாகராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மேலிடப் பொறுப்பாளர், மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் கலந்து கொண்டு எஸ் எஸ் ஏ 2 திட்டம் குறித்து விளக்கினார். அவர் பேசும்போது, 10 பூத்துகள் ஒரு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது என்றும், இதில் குறைந்த பட்சம் வரும் உள்ளாட்சி தேர்தலில் 2 காங்கிரஸ் கவுன்சிலர்கள் வரவேண்டும் என்றும் தெரிவித்தார். கோயம்புத்தூர் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்துள்ளது என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மேயர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் அப்போது இருந்துள்ளனர் என்றும் அவர் நினைவுகூர்ந்தார். ஆகவே மீண்டும் அந்த அடையாளத்தை உருவாக்கும் நோக்கம் இருக்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தலைமையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது போல, இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் 55 வயதிற்கு உட்பட்டோர்களுக்கு பொருப்புகள் வழங்கப்படும் என்றும் ராஜ்குமார் தெரிவித்தார். இருந்த போதும், மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.



தொடர்ந்து நிர்வாகிகளிடம் பூத் பொருப்பாளர்கள் குறித்து கேட்டறிந்து உறுதிப் படுத்தினர். கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், தமிழ்ச்செல்வன், பாஸ்கர், மோகன்ராஜ், இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் சுதன், மணிகண்டன், சதீஷ் குமார், விக்னேஷ், துடியலூர் செந்தில், ஜெகதீஸ்வரி ராமசாமி, சர்க்கிள் நிர்வாகிகள் ஜெகதீஸ்வரன், அண்ணா நகர் ஜெகதீஷ், கார்த்தி, ராம் மனோகர், வார்டு தலைவர்கள் எஸ் சசிகுமார், வடிவேல் மேஸ்திரி, மார்ட்டின், பழனிசாமி, மோகன், ராதாகிருஷ்ணன், விஜயா, பட்டுசாமி, ரமேஷ், ஜகதீஷ் உள்பட 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...