சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல். மேலும் மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்ற தம்பதி கைது. 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை சரவணம்பட்டி பகுதியில் அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 27.8 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சரவணம்பட்டி எஃப்.சி.ஐ குடோன் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடை எண் 1550-ன் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் தலைமையில் போலீசார் குழு நேற்று அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியது.

சோதனையின் போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று இருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து சோதனை மேற்கொண்டனர். அவரிடம் இருந்து பெரும் அளவில் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மரக்காத்தூரைச் சேர்ந்த முனியாண்டி மகன் கண்ணன் (வயது 36) என்பது தெரியவந்தது.

கண்ணன் தற்போது சரவணம்பட்டி டாஸ்மாக் பாரில் தங்கி இருந்து போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்தார் என்பதும் விசாரணையில் வெளியானது. அவரிடம் இருந்து ஹான்ஸ் 16.2 கிலோ, கூல் லிப் 6.760 கிலோ, சுவாகத் கோல்ட் 4.6 கிலோ, வி1 புகையிலை 268 கிராம் என மொத்தம் சுமார் 27.8 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்ணனைக் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதேபோல் மேட்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் சாலை எம்.ஜி.ஆர் மார்க்கெட் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகே சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக சப்-இன்ஸ்பெக்டர் செல்விக்கு தகவல் கிடைத்தது.

இதை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணித்த போது, அங்கு நின்று இருந்த ஒரு ஆணும் பெண்ணும் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கோவை சாயிபாபா காலனி கருணாநிதி நகர், காமராஜர் வீதியைச் சேர்ந்த பாலன் மகன் தினேஷ் (வயது 30) மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி (வயது 29) என்பது தெரியவந்தது. இவர்கள் விற்பனைக்காக மறைத்து வைத்து இருந்த 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தம்பதி இருவர் மீதும் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சாயிபாபா காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...