கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங்கி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திட்டத்தின் முக்கிய அம்சங்கள், விண்ணப்பிக்கும் நடைமுறை மற்றும் பங்களிப்புத் தொகைக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து வங்கி அதிகாரிகள் விளக்கினர்.


கோவை: மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி, கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார்ஹாலில் இன்று நடைபெற்றது.



கோயம்புத்தூர் மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அடல் ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கம், அதன் முக்கிய நன்மைகள், திட்டத்தில் சேருவதற்கான நடைமுறைகள் மற்றும் பங்களிப்புத் தொகையின் அடிப்படையில் கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கனரா வங்கியின் கோவை மண்டல தலைமை அதிகாரியும் துணைப் பொது மேலாளருமான கே.ஆர். சைலஜா, நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் முகமது உசேன், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) அதிகாரிகள் பிரவேஷ்குமார் மற்றும் அஜய்குமார் பொடிசெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.



அவர்கள் அடல் ஓய்வூதியத் திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் பொதுமக்களுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து விளக்கினர். குறிப்பாக, திட்டத்தில் இணைவதற்கான வழிமுறைகள் மற்றும் தொடர்ந்து பங்களிப்பு செய்வதன் மூலம் கிடைக்கக்கூடிய ஓய்வூதியப் பலன்கள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் நிறைவில், கோயம்புத்தூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கனரா வங்கி மற்றும் பிற வங்கிகளின் அதிகாரிகள், அடல் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகள், முதியோர் நலச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...