தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌கோவையை சேர்ந்த சிறுவன் ரக்‌ஷன் 2-ம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.


கோவை: தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ‘ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல்’ போட்டியில் கோவையைச் சேர்ந்த சிறுவன் ரக்‌ஷன் 2-ம் இடம் பிடித்து கவனம் ஈர்த்துள்ளார்.



குழந்தைகளின் தன்னம்பிக்கை, தனித்திறன், ஒழுக்கம் மற்றும் மேடை ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்போட்டியில், அர்மேனியா, மலேசியா, நேபாளம், ரஷ்யா, போட்ஸ்வானா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 20-க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக கோவையைச் சேர்ந்த ரக்‌ஷன் கலந்து கொண்டார்.

போட்டியில் அறிவுத்திறன், நேர்காணல், பாரம்பரிய உடை மற்றும் மேடை நிகழ்த்துதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுகள் இடம்பெற்றன. அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக செயல்பட்ட ரக்‌ஷன் 2-ம் இடத்தைப் பிடித்தார்.

சர்வதேச மேடையில் தனது திறமையை வெளிப்படுத்தி கோவை திரும்பிய ரக்‌ஷனுக்கு மாநில இயக்குனர் சிவக்குமார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர். அவரது வெற்றிக்கு பெற்றோர் வழங்கி வரும் ஊக்கமும் ஆதரவும் பாராட்டுக்குரியது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...