தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக கோவையை சேர்ந்த சிறுவன் ரக்ஷன் 2-ம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
கோவை: தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ‘ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல்’ போட்டியில் கோவையைச் சேர்ந்த சிறுவன் ரக்ஷன் 2-ம் இடம் பிடித்து கவனம் ஈர்த்துள்ளார்.

குழந்தைகளின் தன்னம்பிக்கை, தனித்திறன், ஒழுக்கம் மற்றும் மேடை ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்போட்டியில், அர்மேனியா, மலேசியா, நேபாளம், ரஷ்யா, போட்ஸ்வானா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 20-க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக கோவையைச் சேர்ந்த ரக்ஷன் கலந்து கொண்டார்.
போட்டியில் அறிவுத்திறன், நேர்காணல், பாரம்பரிய உடை மற்றும் மேடை நிகழ்த்துதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுகள் இடம்பெற்றன. அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக செயல்பட்ட ரக்ஷன் 2-ம் இடத்தைப் பிடித்தார்.
சர்வதேச மேடையில் தனது திறமையை வெளிப்படுத்தி கோவை திரும்பிய ரக்ஷனுக்கு மாநில இயக்குனர் சிவக்குமார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர். அவரது வெற்றிக்கு பெற்றோர் வழங்கி வரும் ஊக்கமும் ஆதரவும் பாராட்டுக்குரியது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.