கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில் 20 கிணறுகளில் முதல்கட்டமாக மீன்கள் விடப்பட்டன. 1200 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் கொசுப்புழுக்களை விழுங்கும் கம்பூசியா மீன்களை கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் விடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மலேரியா மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS உத்தரவின் பேரில், மாநகர் நல அலுவலர் மரு.சுபாஷ் காந்தி தலைமையில் 1200 கொசு ஒழிப்பு பணியாளர்கள் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டுகளிலும் வார்டு வாரியாக கொசு ஒழிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

முதற்கட்டமாக மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 20 வார்டுகளில் இன்று (01.09.2026) கொசுப்புழு பெருக்கம் அதிகம் காணப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, 20-க்கும் மேற்பட்ட கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கம்பூசியா மீன்கள் விடப்பட்டன. மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கொசுப்புழு ஆய்வு பணிகளின் அடிப்படையில் இப்பணியை மேற்கொண்டனர்.



மாவட்ட சுகாதார அலுவலகம் மற்றும் கல்வீரம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் மலேரியா, டெங்கு கொசுக்களை அழிக்கும் கம்பூசியா மீன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண் மீன் சிறியதாகவும், பெண் மீன் பெரியதாகவும் இருக்கும். ஒரு கிணற்றில் 2 ஆண், 8 பெண் மீன் என்ற விகிதத்தில் விடப்படுகிறது.

வளர்ந்த ஒரு கம்பூசியா மீன் ஒரு நாளில் 100 முதல் 300 கொசுப்புழுக்களை உண்ணும் திறன் கொண்டது. இம்மீனின் வாழ்நாள் ஒரு ஆண்டு. மீன் விடப்பட்ட கிணறு மற்றும் நீர்நிலைகளில் பிளீச்சிங் பவுடர் மற்றும் ஆயில் போன்றவற்றை தெளிக்கக்கூடாது என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 33 இடங்களில் நடக்கும் முகாம்களில், காய்ச்சல் மற்றும் தொற்று நோய் கண்டறியப்பட்டால் அப்பகுதியில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகர் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் 10,000 கம்பூசியா மீன்கள் விடப்பட உள்ளன. இதற்காக மாநகராட்சியில் சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களில் இந்த மீன்கள் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன.

இப்பணியில் 1200 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 60 சுகாதார ஆய்வாளர்கள், 5 மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் 21 துப்புரவு ஆய்வாளர்கள் அடங்கிய தனிக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...