கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 பவுன் தங்கச் செயின், 2 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை: கோவை வெள்ளலூர் பகுதியில் முகமூடி அணிந்து வயதான பெண்ணிடம் தங்கச் செயினை பறித்த வழக்கில், கல்லூரி மாணவர் மற்றும் மாணவி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 4 பவுன் தங்கச் செயின், 2 செல்போன்கள் மற்றும் குற்றச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி மாலை சுமார் 5.25 மணியளவில் சரஸ்வதி என்பவர் தனது உறவினர்களுடன் வெள்ளலூர் கறிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே, பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சரஸ்வதியிடம் வந்து, அருகில் உள்ள கிளினிக் எப்போது திறக்கப்படும் எனக் கேட்டுள்ளார். தினமும் மாலை 5 மணியளவில் கிளினிக் திறக்கப்படும் என்றும், அன்று இதுவரை திறக்கப்படவில்லை என்றும் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, மருத்துவரின் வீடு எங்கு உள்ளது என அந்த நபர் கேட்டபோது, சரஸ்வதி தெற்கு திசையில் உள்ள மைதான சாலையைச் சுட்டிக் காட்டியுள்ளார். அப்போது திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 4 பவுன் எடையுள்ள தங்கச் செயினை பறித்துக் கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் நிலைதடுமாறி சரஸ்வதி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டதுடன், செயினைப் பறித்த நபரை பிடிக்க முயன்றும் அவர் தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில், போத்தனூர் காவல் ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சம்பவ இடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள CCTV கேமரா பதிவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன.

விசாரணையில், குற்றச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் TVS Jupiter இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை போலீசார் கண்டறிந்தனர். தொடர்ந்து, குற்றவாளிகள் சென்றதாகக் கருதப்படும் வழித்தடங்களில் உள்ள CCTV பதிவுகளையும் ஆய்வு செய்து, அவர்களின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்தனர்.

இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், சிந்து என்ற கல்லூரி மாணவியும், பரணிதரன் (21) என்ற கல்லூரி மாணவரும் இணைந்து வயதான பெண்களிடம் நகைகளைப் பறிக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆடம்பர வாழ்க்கை வாழவும், பரணிதரனுக்கு இருந்த கடனை அடைக்கவும் இந்தத் திட்டத்தை மேற்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருவரும் வெள்ளலூர் பகுதியில் வயதான பெண்களை நோட்டமிட்டு வந்ததாகவும், சம்பவத்தன்று பரணிதரன் முகமூடி அணிந்து சரஸ்வதியிடம் பேச்சுக் கொடுத்து அவரது கவனத்தை திசைதிருப்பி, பின்னர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

CCTV பதிவுகளின் அடிப்படையில் முதலில் சிந்துவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில், கே.ஜி. சாவடி அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த பரணிதரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பறிக்கப்பட்ட சுமார் 4 பவுன் தங்கச் செயின், 2 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...