கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி வாகனத்தை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவ கணேஷ் இந்த வாகனத்தை மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலாவிடம் ஒப்படைத்தார்.


கோவை: கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகம் செய்வதற்கென பிரத்யேக பேட்டரி வாகனத்தை ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கியதுடன், கொரோனா நிதியாக முதன் முதலாக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவ கணேஷ். கோவை மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் கோவை அரசு மருத்துவமனைக்கு புதிய பேட்டரி வாகனத்தை ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.



மருத்துவமனையின் உள்ளே பெரிய உணவு பாத்திரங்களை கொண்டு செல்வதற்கும், மருந்துகளை ஆங்காங்கே உள்ள மருத்துவ பிரிவுகளுக்கு எடுத்து செல்லவும் வசதியாக பிரத்யேக பேட்டரி ஆட்டோ வாகனத்தின் சாவியை ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிவகணேஷ், கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலாவிடம் வழங்கினார்.

இது குறித்து டீன் டாக்டர் நிர்மலா கூறுகையில், "மருத்துவமனை வளாகத்திற்கு மிகவும் தேவையான இந்த வாகனத்தை வழங்கிய ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குனருக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்," என்றார்.

தொடர்ந்து பேசிய ஸ்ரீதேவி சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் சிவ கணேஷ், "மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கி வரும் சேவையை ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த பேட்டரி வாகனத்தை அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளோம்," என்றார்.



நிகழ்வின் முடிவில், அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிவ கணேஷ் மதிய உணவு வழங்கினார்.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...