பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட தினம்: அமைச்சர் சாமிநாதன் மரியாதை

பொள்ளாச்சியில் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட தினத்தை முன்னிட்டு, அமைச்சர் சாமிநாதன் திட்டத்தின் முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்தினார். விவசாயிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.


Coimbatore: பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு, திட்டத்தின் முன்னோடிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் உருவான நாளான அக்டோபர் 7ம் தேதியை தமிழக அரசு பாசன திட்ட தினமாக அறிவித்திருந்தது. இதனை முன்னிட்டு, பொள்ளாச்சி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.



இந்நிகழ்வில், திட்டம் உருவாக காரணமாக இருந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே. பழனிச்சாமி கவுண்டர், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான பொள்ளாச்சி மகாலிங்கம், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் கே.எஸ். ராவ் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு அமைச்சர் சாமிநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati, பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மகன் மாணிக்கம், திருமூர்த்தி நீர்த்தேக்க திட்ட குழு தலைவர் பரமசிவம், ஆழியார் அணை பாசன திட்ட தலைவர் செந்தில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட விவசாயிகள் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கும், குடிநீர் தேவைக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...