உடுமலையில் நெகிழி எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி: 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மானுப்பட்டியில் வனஉயிரின வார விழாவின் ஒரு பகுதியாக நெகிழி எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் 6 கி.மீ தூரம் மிதிவண்டியில் பயணித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மானுப்பட்டி பகுதியில் வனஉயிரின வார விழாவின் ஒரு பகுதியாக நெகிழி எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வு ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் தேவேந்தர குமார் மீனா ஐ.ஃப்.எஸ். அவர்களின் உத்தரவின்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலைப்பேட்டை வனச்சரகம், திருப்பூர் வனக்கோட்டம், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் ஆரன்யா அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலும், வனவர் நிமல் முன்னிலையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.



எண்ணம் போல் வாழ்கை அறக்கட்டளை நிறுவனர் எஸ்.ஏ.ஐ.நெல்சன் மற்றும் ஆர்.ஜி.எம் கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.



ஆர்.ஜி.எம் மேல்நிலை பள்ளி மற்றும் அமராவதி சைனிக் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மிதிவண்டி பேரணியில் கலந்துகொண்டனர்.



மிதிவண்டி பேரணி மானுப்பட்டியில் இருந்து ஏழுமலையன் கோவில் பிரிவு வரை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.



பின்னர் ஏழுமலையான் கோவில் பிரிவில் மாணவ மாணவிகளுக்கு நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் வனத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கையெழுத்து பிரச்சாரமும் நடைபெற்றது. வனத்துறை பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உடனிருந்து நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கினர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...