கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 7, 2024 அன்று தேனீ வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி கட்டணம் ரூ.590, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.


Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. அக்டோபர் 2024 மாதத்திற்கான பயிற்சி, அக்டோபர் 7, 2024 திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது.

பயிற்சியின் முக்கிய அம்சங்களில் தேனீ இனங்களை அடையாளம் காணுதல் மற்றும் வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்களுக்கான உணவுப் பயிர்கள் மற்றும் மகரந்தச் சேர்க்கை மூலம் மகசூலை அதிகரிக்கும் பயிர்கள் பற்றிய விவரங்கள், தேன் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் ஆகியவை அடங்கும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், பயிற்சி நாளன்று காலை 9.00 மணிக்கு பூச்சியியல் துறைக்கு நேரில் வந்து, அடையாள ஆவணங்களைச் சமர்ப்பித்து, பயிற்சிக் கட்டணமாக ரூ.590/- (ஐநூற்று தொண்ணூறு ரூபாய் மட்டும்) செலுத்த வேண்டும். பயிற்சி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். பயிற்சியின் முடிவில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 0422-6611214.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...