கோவை ஈச்சனாரி கற்பகம் கல்லூரியில் நாளை மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஈச்சனாரி கற்பகம் கல்லூரியில் அக்டோபர் 5ஆம் தேதி மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை (அக்டோபர் 5) நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த வேலை வாய்ப்பு முகாம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இதில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் இளங்கலை மற்றும் முதுகலை தொழில்நுட்பக் கல்வி, பட்டப் படிப்பு, ஐடிஐ படித்தவர்கள் பங்கேற்கலாம். ஊரகம் மற்றும் நகர்ப்புறத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற 18 வயது முதல் 35 வயது வரையுள்ள படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

பங்கேற்பாளர்கள் கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, சுயவிவரக் குறிப்பு, புகைப்படம், இதர தகுதிச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும். இந்த முகாமில் பங்கேற்பவர்கள் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு மற்றும் நேரடி வேலை வாய்ப்பு பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...