கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மது போதையில் நண்பர்களால் இளைஞர் கல்லால் தாக்கி கொலை

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மது போதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், கண்ணன் என்ற இளைஞர் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வளமீட்பு பூங்காவை ஒட்டிய பகுதியில் ஒரு இளைஞர் தலையில் படுகாயங்களுடன் பிணமாக கிடப்பதாக பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கோவை, சித்தாபுதூர் வெங்கடசாமி ரோட்டைச் சேர்ந்த லோகநாதனின் மகன் கண்ணன் என்பது தெரியவந்தது. கண்ணன் தனது நண்பர்களான கார்த்திக், ரவீந்திரன், சதீஷ் உட்பட ஐந்து பேருடன் சித்தாப்புதூரில் உள்ள ஒரு பாரில் மது அருந்தியுள்ளார்.



பின்னர் வாடகை காரில் பெரியநாயக்கன்பாளையம் வளமீட்பு பூங்கா பகுதிக்கு வந்த அவர்கள், அங்கும் மது அருந்தினர். போதை தலைக்கேறியதும் கண்ணனுக்கும் நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நண்பர்கள் கண்ணனை கருங்கல் மற்றும் பீர் பாட்டிலால் தலையிலும் வயிற்றிலும் பலமாக தாக்கினர். இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

சம்பவத்திற்குப் பிறகு கண்ணனின் நண்பர்கள் தப்பியோடி விட்டனர். இந்த கொலை தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார்த்திக், ரவீந்திரன், சதீஷ் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...