கோவை துடியலூரில் காந்தி ஜெயந்தி: இலவச கண் பரிசோதனை முகாம்

கோவை துடியலூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கவுண்டம்பாளையம் MLA பி.ஆர்.ஜி.அருண்குமார் முகாமை தொடங்கி வைத்தார்.


Coimbatore: கோவை துடியலூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் மாபெரும் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பெண்கள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து இந்த முகாமை நடத்தினர். துடியலூர் கார் ஸ்டேண்டு அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் வி.ஆர்.முருகேசன் தலைமை தாங்கினார்.



சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் முகாமை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

தி ஐ பவுண்டேசன் மருத்துவர்களான டாக்டர் அலிசா, டாக்டர் ஜெகநாதன் மற்றும் செவிலியர்கள் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அறக்கட்டளை உறுப்பினர்களான ராஜன், செல்வி பானுபிரியா, தமிழரசி, பார்த்தசாரதி, வெங்கடேசன், அருண்குமார், சுதாகர் ஆகியோர் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் அறக்கட்டளை செயலாளர் கண்ணதாசன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...