காந்தி ஜெயந்தி: கோட்டை மருதூரில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கோட்டை மருதூரில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார். பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டை மருதூர் கிராமத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோட்டை மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் வடிவு சிவசாமி தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் திட்ட இயக்குனர் மலர்கொடி மற்றும் மூலனூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார்.



கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் மற்றும் பஞ்சாயத்து தூய்மையாக வைத்திருப்பது குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைத்தார்.



இதைத் தொடர்ந்து அறுபதுக்கு மேற்பட்ட பொதுமக்கள், சாலை வசதி, கலைஞர் உதவித்தொகை, ஊனமுற்றோருக்கு ஊனமுற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரிடம் வழங்கினர்.



இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...