காந்தி ஜெயந்தி: தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மரியாதை

தாராபுரத்தில் காந்தி ஜெயந்தி அனுசரிப்பு: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அஹிம்சை வழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


Coimbatore: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர், லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளையும், காமராஜரின் நினைவு நாளையும் முன்னிட்டு அவர்களின் சிலைகளுக்கும் மரியாதை செலுத்தினார்.



இந்நிகழ்வு தாராபுரம் திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் தலைமையிலும், திமுக நகர அவை தலைவர் கதிரவன் முன்னிலையிலும் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் தென்னரசும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசுகையில், "காந்தி அஹிம்சை வழியில் போராடியவர். அவர் வழியில் பின்பற்றி நடக்க வேண்டும். அவர் வாழ்ந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், திமுக நகர துணை செயலாளர்கள் கமலக்கண்ணன், தவச்செல்வன், செலின் பிலோமினா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி ராஜேந்திரன், பிரபாவதி பெரியசாமி, நகர் மன்ற உறுப்பினர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் நகர தலைவர் செந்தில்குமார், செய்தி தொடர்பாளர் முருகானந்தம், திருப்பூர் கலைமாமணி கலாராணி, நகராட்சி துணைத்தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் காணபிரியா, அசோக்குமார், வரப்பாளையம் முத்துக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...