காந்தி ஜெயந்தி: கோவை கதர் அங்காடியில் மாவட்ட ஆட்சியர் மரியாதை - தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

கோவை கதர் அங்காடியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மரியாதை செலுத்தினார். தீபாவளி சிறப்பு விற்பனையையும் தொடங்கி வைத்தார். கதர் பொருட்களுக்கு 30% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை உப்பிலிப்பாளையம் பகுதியில் உள்ள கதர் அங்காடி நிலையத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு, காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் ராஜேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டு மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.



தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். முதல் விற்பனையையும் அவரே பெற்றுக் கொண்டார். காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் அங்காடியில் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.



கதர் ரகங்களுக்கு 30 சதவீதம், பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம், பாலிஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதம், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கிராமப்புற ஏழைப் பெண்களின் மேம்பாட்டு நலனை கருதியும், சிறுதொழில் வல்லுநர்களை ஊக்குவிக்கும் வகையிலும் மாநில அரசும் கதர் கிராமத் தொழில்கள் ஆணைக்குழுவும் இந்த தள்ளுபடி சலுகையை வழங்கியுள்ளன. பொதுமக்கள் இந்த சலுகையை பயன்படுத்தி கதர் ரகங்களை அதிக அளவில் வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...