மனிதக் கழிவுகளை நீராக மாற்றும் பாக்டீரியா பவுடர்: திருப்பூர் நிறுவனம் அறிமுகம்

திருப்பூரில் ஒரு நிறுவனம் மனிதக் கழிவுகளை நீராக மாற்றும் பாக்டீரியா பவுடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது விஷவாயு தாக்குதல்களைத் தடுக்கவும், மனிதக் கழிவு அகற்றும் முறையை மாற்றவும் உதவும்.



திருப்பூர்: மனிதக் கழிவுகளை அகற்றும்போது ஏற்படும் விஷவாயு தாக்குதல்களால் தொழிலாளர்கள் உயிரிழப்பதைத் தடுக்கவும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றவும், திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனம் மனிதக் கழிவுகளை நீராக மாற்றும் பாக்டீரியா பவுடரை அறிமுகப்படுத்தியுள்ளது.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மைக் காலங்களில், மனிதக் கழிவுகளை அகற்றும்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவங்களும், வீடுகளில் விஷவாயு பரவி பொதுமக்கள் இறந்த சம்பவங்களும் நடந்துள்ளன.

மேலும், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்களால் எடுத்துச் செல்லப்படும் கழிவுகள் சில இடங்களில் திறந்த வெளியில் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.

இந்த பிரச்சினைகளைத் தீர்க்க, ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற திருப்பூர் நிறுவனம் ஒன்று மலக்கழிவுகளை நீராக மாற்றும் திறன் கொண்ட பாக்டீரியா பவுடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பவுடரை கழிவறையில் நீரில் கலந்து ஊற்றும்போது, அது நேரடியாக செப்டிக் டேங்கிற்குச் சென்று மலக்கழிவுகளை டைலூட் செய்துவிடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.



செப்டிக் டேங்கில் உள்ள மலக்கழிவுகள் நீராக மாறிய பின்னர், அதனை விவசாய பயன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. சோக்பிட், செப்டிக் டேங்க் போன்ற இடங்களில் தேங்கியுள்ள கழிவுகளை இந்த பவுடரைக் கொண்டு மக்கச் செய்து நீராக மாற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாக்டீரியா பவுடர் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் என்றும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் இந்த பவுடர் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...