தென்கிழக்கு ஆசிய ஜஸ் ஸ்கேட்டிங் போட்டியில் கோவை மாணவர் மூன்று வெண்கலப் பதக்கங்கள் வெற்றி

பிலிப்பைன்ஸின் மனிலாவில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய ஜஸ் ஸ்கேட்டிங் போட்டியில் கோவை குமரகுரு கல்லூரி மாணவர் பிரணவ் அருண்பிரசாத் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றார். 11 நாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை குமரகுரு லிபரல் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் பிரணவ் அருண்பிரசாத், பிலிப்பைன்ஸின் மனிலா நகரில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய ஜஸ் ஸ்கேட்டிங் போட்டியில் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். செப்டம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெற்ற இப்போட்டியில், பிரணவ் அருண்பிரசாத் இந்திய அணி சார்பில் ஜூனியர் A பிரிவில் (17-19 வயது) பங்கேற்றார்.

இப்போட்டியில் இந்தியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, சீனா, ஹாங்காங், மங்கோலியா, சிங்கப்பூர், வியட்நாம், உஸ்பெகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். பிரணவ் அருண்பிரசாத் தனது வயது பிரிவில் 500, 1000 மற்றும் 1500 மீட்டர் போட்டிகளில் முறையே மூன்றாம் இடம் பிடித்து மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.



குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே வீரர் பிரணவ் அருண்பிரசாத் ஆவார். கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரணவ் அருண்பிரசாத்தை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், போட்டிகளில் பங்கேற்க உண்டான தொகையான 1,95,000 ரூபாயை தமிழக அரசின் சார்பில் நேரில் வழங்கி வாழ்த்தினார்.



போட்டிகளில் வெற்றி பெற்ற பிரணவ் அருண்பிரசாத், அக்டோபர் 1 ஆம் தேதி காலை 8:00 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பி வருகிறார். இந்த சாதனை மூலம் கோவை மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் பிரணவ் அருண்பிரசாத்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...