மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் மண் சரிவு: ஒரு நாள் சேவை ரத்து

மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் கனமழையால் மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. தண்டவாளங்கள் சேதமடைந்ததால் ஒரு நாள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


Coimbatore: மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளம் சேதம் அடைந்ததால், இன்று ஒரு நாள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து தினசரி குன்னூர் மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. கல்லார் முதல் குன்னூர் வரை அடர்ந்த வனப்பகுதிக்குள் பயணிக்கும் மலை ரயில் பாதையில் அவ்வப்போது மழைக்காலங்களில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் சேதமடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



கடந்த இரண்டு நாட்களாக குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு கல்லார் மற்றும் குன்னூர் இடையே உள்ள வனப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே உள்ள மலை ரயில் பாதையில் மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மலை ரயில் பாதை சேதமடைந்துள்ளது.

கல்லார் முதல் ஹில்கிரோ வரை அடுத்தடுத்து மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளங்கள் சேதம் அடைந்துள்ளன. இன்று காலை தண்டவாளங்களை சரிபார்க்க சென்ற ரயில்வே ஊழியர்கள் ரோந்து பணியின் போது மண் சரிவு ஏற்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று குன்னூருக்கு காலை புறப்பட்டு சென்ற மலைரயில் கல்லார் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. இந்த தகவல் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து இன்று ஒரு நாள் ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், சேதமடைந்த பெல் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிக்கு ரயில்வே ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...