கோவையில் கத்தியைக் காட்டி போலீசாரை மிரட்டிய இளைஞர் கைது: 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவையில் வாகன சோதனையின் போது 150 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் கண்டுபிடிப்பு. போலீசாரை கத்தியால் மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். அரிசி, கத்தி மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல்.


Coimbatore: கோவை கரும்புக்கடை போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீஸ் குழு, நேற்று (செப்டம்பர் 28) மாலை புட்டுவிக்கி ரோடு சுண்ணாம்பு காளவாய் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது, ஸ்கூட்டரில் மூட்டைகளுடன் வந்த இளைஞர் ஒருவரை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் சுமார் 150 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி கடத்தல் செய்யப்படுவது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த இளைஞர் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டினார். உடனடியாக செயல்பட்ட போலீசார், அவரை கைது செய்தனர்.


கைது செய்யப்பட்டவர் தெற்கு உக்கடம் ஜிஎம் நகரைச் சேர்ந்த ஜமீஷா (29) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 150 கிலோ ரேஷன் அரிசி, ஒரு பட்டாக் கத்தி மற்றும் ஒரு ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


இச்சம்பவம் குறித்து கரும்புக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து, மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக வேறு யாராவது சம்பந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...