உலக இதய தினம்: பொள்ளாச்சியில் மாரடைப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

பொள்ளாச்சியில் உலக இதய தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கோவை தனியார் மருத்துவமனை சார்பில் மாரடைப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: உலக இதய தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் மாரடைப்பு குறித்து இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கோவை தனியார் இருதய மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் தொடங்கிய பேரணி கோவை சாலை, பல்லடம் சாலை, புதிய திட்ட சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் நிறைவடைந்தது. மாரடைப்பு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



இருதய நோய், குறிப்பாக மாரடைப்பு நோய் உலகளவில், அதுவும் இந்தியாவில் மிக அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மாரடைப்பு நோய் தான் மனித இனத்தை அழிக்கும் முதல் நோயாக கருதப்படுகிறது. 40 சதவீத மனித உயிர்கள் இழப்பிற்கு காரணம் மாரடைப்பு நோய் என்பது குறிப்பிடத்தக்கது. 2025 ஆம் ஆண்டின் முடிவில் 25 சதவீத இந்திய மக்களை மாரடைப்பு நோய் பாதிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 10 வினாடிகளுக்கு ஒருவர் மாரடைப்பால் உயிரிழப்பது வேதனையானது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். கிரிக்கெட், செஸ் விளையாட்டுகளில் இந்தியா முதல் இடத்தில் இருப்பது பெருமை, ஆனால் மாரடைப்பில் முதலிடம் என்பது கவலை அளிக்கிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எனவே இளைஞர்கள் தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாமல் உடற்பயிற்சி, யோகா, உணவு பழக்க வழக்கங்களை மாற்றி இந்த நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ள முயற்சி எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...