பட்டியலினத்தவரை துணை முதல்வராக்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலினத்தவரை துணை முதல்வராக்கி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். திமுகவின் கூட்டணி நடைமுறைகளையும் விமர்சித்துள்ளார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலினத்தவரை துணை முதல்வராக்கி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

திமுகவின் கூட்டணி நடைமுறைகளை விமர்சித்த வானதி சீனிவாசன், "கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிடவே அச்சம் கொள்ளும் திமுக, கூட்டணி இல்லாமல் வெற்றி பெறவே முடியாத திமுக, கூட்டணி கட்சிகள் தயவில் வெற்றி பெற்றதும், தனித்து ஆட்சி அமைக்கும்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக அரசின் அமைச்சரவையில் பட்டியலினத்தவருக்கு முக்கியத்துவம் இல்லை என்றும், 34 பேர் கொண்ட அமைச்சரவையில் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு கடைசி இடங்களே வழங்கப்பட்டுள்ளதாகவும் வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்த 6 முறைகளிலும் வலுவான கூட்டணி அமைத்துதான் வென்றதாகவும், ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கு தரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"கூட்டணி இல்லாமல் இதுவரை தேர்தலை சந்திக்க கூட துணிவில்லாத திமுக, ஆட்சிக்கு வந்ததும் கூட்டணி கட்சிகளை துச்சமென மதிக்கிறது. கறிவேப்பிலையைப் போல தேர்தலின்போது பயன்படுத்திக் கொண்டு, தேர்தல் முடிந்து ஆட்சி அதிகாரம் கைக்கு வந்ததும் தூக்கி வீசி விடுகிறது," என்று வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இறுதியாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முன்வைத்துள்ள 'ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு' என்ற கோரிக்கையை ஆதரித்து, திமுகவின் கூட்டணி நடைமுறைகளில் மாற்றம் தேவை என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...