அதிமுக நிர்வாகிகள் தாக்குதல் வழக்கு: கோவை நீதிமன்றத்தில் திமுக செயலாளர் நா.கார்த்திக் ஆஜர்

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜரானார். பல திமுக நிர்வாகிகள் அவருடன் வருகை தந்தனர்.


Coimbatore: கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாக கூறப்படும் வழக்கு தொடர்பாக கோவை ஜே.எம். 1 நீதிமன்றத்தில் புதன்கிழமை காலை ஆஜரானார்.

இந்த வழக்கு, கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பானது. "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" என்ற புத்தகத்தை நா.கார்த்திக் பொதுமக்களுக்கு விநியோகித்த போது, அருகிலிருந்த அதிமுக மன்றம், பெயர்ப்பலகை மற்றும் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தி, அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.



நீதிமன்றத்திற்கு நா.கார்த்திக்குடன் பல முக்கிய திமுக நிர்வாகிகள் வருகை தந்தனர். இதில் திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா. மணிகண்டன், வழக்கறிஞர்கள் அகஸ்டஸ், ப.கிருஷ்ணமூர்த்தி, மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புச் செழியன், மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் மருது பாண்டியன் உள்ளிட்ட பலர் அடங்குவர்.

மேலும், சரவணன், என்.ஆர்.விக்ரம், முத்து விஜயன், மணிவேல், மதிவாணன், கண்ணன், குமணன், சலாவுதீன், சி.என்.சந்திரன், ராஜமாணிக்கம், முத்துக்குமார், ஜீவா, நிஜலிங்கப்பா, லிங்கராஜா, சின்னத்துரை, வெங்கடாசலம், ராஜ்குமார், சதீஷ், மகாவிஷ்ணு, ஆனந்த குமார், விஷால், சந்திரமோகன், முருகானந்தம், பிரபாகரன், ஸ்டீபன், மாதவன், எலிசபெத் ராணி, கலைவாணி, மோகன்குமார், பழையூர் சோமு, ஆனந்தன், ராஜா போன்ற பல திமுக நிர்வாகிகளும் வருகை தந்தனர்.

வட்டக்கழக செயலாளர்கள் டவுன் பா.ஆனந்தன், நாராயணன், கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் ராஜாமணி, கேசவன், இரா.நாகராஜ், சபரி கோபால், அபி, பிரின்ஸ், கிரீன் வேசுப்பிரமணி, நூல் ஆறுமுகம், கலியமூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...