உடுமலை அருகே சிறுமிகளை ஜிப் ஓட்ட வைத்து வீடியோ எடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையத்தில் சிறுமிகளை ஜிப் ஓட்ட வைத்து வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட காளிமுத்து என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பள்ளபாளையம் பகுதியில் சிறுமிகளை ஜிப் ஓட்ட வைத்து வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னிடம் உள்ள ஜீப் குறித்து பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், இரண்டு சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து, அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்க வைத்து அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆக பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிறுமிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதற்கு காளிமுத்து மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறார்களை ஆபத்தான நிலைக்கு உள்ளாக்கியதோடு, அவர்களின் பாதுகாப்பை புறக்கணித்து செயல்பட்டதற்காக காளிமுத்து மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இது போன்ற ஆபத்தான செயல்களை தடுக்க வேண்டும் என்றும், சமூக ஊடகங்களில் லைக்குகள் மற்றும் பார்வையாளர்களை பெறுவதற்காக சிறார்களை பயன்படுத்தும் போக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...