உடுமலையில் மாநில அளவிலான ரேக்ளா போட்டி: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் துவக்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாமராயப் பட்டியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான ரேக்ளா போட்டி நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இரட்டை மாட்டு வண்டியில் ஏறி போட்டிகளை துவக்கி வைத்தார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாமராயப் பட்டியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான ரேக்ளா எனப்படும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் இப்போட்டியில் கலந்து கொண்டன.

இப்பந்தயத்தில் 200 மீட்டர், 400 மீட்டர் என்ற இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. குறிப்பிட்ட இலக்கை குறுகிய நேரத்தில் அடையும் இரட்டை மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.



முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இரட்டை மாட்டு வண்டியில் ஏறி போட்டிகளை துவக்கி வைத்தார். ரேக்ளா போட்டியில் வெற்றி பெற்ற இரட்டை மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அமைச்சர் கயல்விழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஈஸ்வரசுவாமி, ஈரோடு பிரகாஷ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ருத்ரப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உடுமலை அருகே நடைபெற்ற இந்த மாநில அளவிலான ரேக்ளா போட்டியை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாலையில் இருபுறமும் நின்று கண்டு களித்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...