ராகுல் காந்திக்கு எதிராக பேசிய பாஜக, சிவ சேனா தலைவர்கள் மீது காங்கிரஸ் புகார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜக மற்றும் சிவ சேனா தலைவர்கள் ராகுல் காந்திக்கு எதிராக கடுமையாக பேசியதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் 11 காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காங்கிரஸ் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில், ராகுல் காந்திக்கு எதிராக கடுமையாகப் பேசிய பாஜக மற்றும் சிவ சேனா தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டுள்ளது.



தாராபுரம், அலங்கியம், குண்டடம், மூலனூர், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பதினோரு காவல் நிலையங்களில் காங்கிரஸ் கட்சியினர் இந்த புகாரை அளித்துள்ளனர். பாஜக தலைவர்கள் தர்விந்தர் சிங் மார்வா, ரவ்நீத் சிங் பிட்டு, ரகுராஜ் சிங், சிவ சேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் ஆகியோர் மீது குறிப்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.



புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு, "மறைந்த இந்திரா காந்தி மற்றும் மறைந்த ராஜீவ் காந்தி ஆகியோர் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்கள். அதன் பிறகும் இதுபோன்ற மிரட்டல்களை அவர்கள் விடுக்கிறார்கள். இந்திய அரசியலை இதைவிட கீழ் நிலைக்கு தள்ள முடியாது. வெறும் ஒரு பாஜக தலைவர் மட்டுமல்ல, பல தலைவர்கள் இதுபோன்ற கருத்துக்களைச் சொன்னார்கள். ஆனால் பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை," என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "ராகுல் காந்தி எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை மக்களுக்காகப் பேசுகிறார். அதனால்தான் பாஜகவினர் அவருடைய வார்த்தைகளை விரும்பவில்லை. அதனால் தான் அவரை மிரட்டுகின்றனர். ஆனால் - இது காங்கிரஸ் கட்சி, நாங்கள் பயப்படவோ அஞ்சவோ மாட்டோம்" என்றும் கூறினார்.

ரயில்வே இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு, ராகுல் காந்தியை "நாட்டின் நம்பர் ஒன் பயங்கரவாதி" என்று குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை பாஜகவைச் சேர்ந்த உத்தரப் பிரதேச அமைச்சர் ராகுராஜ் சிங்கும் கூறியுள்ளார். சிவ சேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட், ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரில், "அமைதியை சீர்குலைக்கும் நோக்கிலும், வன்முறையை தூண்டும் நோக்கிலும் ராகுல் காந்திக்கு எதிராக வேண்டுமென்றே இவர்கள் இவ்வாறு பேசி உள்ளனர். இவர்களின் இந்த கருத்துக்கள் டிவி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவலாக வெளியாகி உள்ளது. எனவே, IPC-ன் 351, 352, 353, 61 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை எந்த தாமதமும் இல்லாமல் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும்," என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.



இந்த புகார் அளிக்கும் போது காங்கிரஸ் நகர தலைவர் செந்தில் குமார், செய்தி தொடர்பாளர் முருகானந்தம், திருப்பூர் கலைமாமணி கலாராணி, நகராட்சி துணைத் தலைவர் ரவிச்சந்திரன், காண பிரியா, அசோக் குமார், ஹக்கீம் உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...