கோவையில் போலி பத்திரிகையாளர்களை அடையாளம் காண வாட்ஸ்அப் எண் அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர்

கோவையில் போலி பத்திரிகையாளர்கள் மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்துள்ளன. இதனை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்ணை அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடி செய்பவர்களை அடையாளம் காண மாவட்ட நிர்வாகம் வாட்ஸ்அப் எண்ணை அறிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் சிலர் அரசு அதிகாரிகளை மிரட்டுவதும், அவர்கள் குறித்து அவதூறு செய்திகளை வெளியிடுவதும் தெரிய வந்துள்ளது. மேலும், உயர் அதிகாரிகளை நன்கு தெரியும் என்று கூறி மக்களிடம் மனுக்கள் மற்றும் பணத்தை பெற்றுக் கொள்கின்றனர்.

அரசு அலுவலகங்கள் முன்பு போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய நபர்களை கண்காணிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி கண்டறியப்படும் போது அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பத்திரிகையாளர் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் 94980-42423 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவல்களை அனுப்பலாம். இந்த எண்ணுக்கு வரும் புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...