கோவை வடக்கு வட்டத்தில் கலெக்டர் கிராந்தி குமார் பாடி தங்கியுள்ளார்; CRPF வளாகத்தில் தீவிர பாதுகாப்பு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, CRPF பயிற்சி கல்லூரி வளாகத்தில் தங்கியுள்ளார். யானைகள் நடமாட்டம் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை வடக்கு வட்டத்தில் உள்ள CRPF பயிற்சி கல்லூரி வளாகத்தில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தங்கியுள்ளார். தமிழ்நாடு அரசின் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் மாதத்திற்கு ஒரு வருவாய் வட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த வட்டத்தின் உள்ளேயே ஏதாவது ஒரு கிராமத்தில் கலெக்டர் தங்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்த திட்டத்தின் அடிப்படையில், செப்டம்பர் 18 அன்று பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட கோவை வடக்கு வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், அன்று இரவு CRPF வளாகத்தில் தங்கினார். இப்பகுதியில் இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் உள்ளதால், CRPF வளாகத்திற்கு சுற்றியும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கலெக்டருடன் ஆய்வு மேற்கொண்ட அனைத்து துறை அதிகாரிகளும் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அன்று இரவு தங்கினர். மேலும், மறுநாள் காலை 10 மணி வரை மீண்டும் இப்பகுதியில் பொதுமக்களின் குறைகளை கேட்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...