ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மக்கள் குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு செய்தனர். அத்திப்பூ கோலம், பாரம்பரிய உடைகள் மற்றும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்வு ஆகியவை இடம்பெற்றன.



Coimbatore: கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான மலையாள மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

மலையாள மக்கள் தங்களின் பாரம்பரிய உடைகளில் கோவிலுக்கு வந்தனர். கோவில் வளாகத்தில் கொடிக்கம்பத்தின் கீழே அத்திப்பூ கோலம் போடப்பட்டிருந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.



மலையாள மக்கள் தங்கள் வீடுகளிலும் அத்திப்பூ கோலமிட்டு சாமி தரிசனம் செய்து, பின்னர் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தனர். ஓணம் பண்டிகையின் போது மகாபலி மன்னன் பூவுலகிற்கு வருவதாக ஐதீகம் உள்ளது. அவரை வரவேற்கும் விதமாக 10 நாட்கள் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஐயப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நாளில் பிறந்து சில மாதங்களான குழந்தைகளுக்கு முதல் முறையாக சோறு ஊட்டுவது ஐதீகம் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.

கேரளாவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும், குறிப்பாக சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளிலும் ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...