வால்பாறையில் நாளை விநாயகர் சிலைகள் விசர்ஜனம்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

வால்பாறையில் 108 விநாயகர் சிலைகள் நாளை விசர்ஜனம் செய்யப்படுகின்றன. ஊர்வலம் காரணமாக போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கவனத்திற்கு.


கோவை: வால்பாறையில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 விநாயகர் சிலைகள் நாளை (செப்டம்பர் 15) விசர்ஜனம் செய்யப்படுகின்றன. இதனை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வால்பாறையில் 3 அடி முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒரு வார வழிபாட்டிற்கு பின் நாளை (செப்டம்பர் 15) மதியம் 12:00 மணிக்கு எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்படுகின்றன.

வால்பாறை நகரில் முக்கிய வீதி வழியாக மதியம் 2:00 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டு மாலை 5:00 மணிக்கு நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. இந்த ஊர்வலம் மற்றும் விசர்ஜன நிகழ்வுகளை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வெளியூர் மற்றும் சோலையாறுடேம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, பழைய வால்பாறை வழியாக இயக்கப்படும். சின்கோனா, முடீஸ், வெள்ளமலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். அக்காமலை, கருமலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் நடுமலை பழைய தொழிற்சாலையிலிருந்து இயக்கப்படும்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இந்த போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் இன்று (செப்டம்பர் 14) தெரிவித்துள்ளனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணங்களை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...