கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் நிகழ்வில் பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு தெரிவித்தனர்.


Coimbatore: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் PRG அருண்குமார் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான இன்று (06-04-2026) தேர்தல் நடத்தும் அலுவலர் வினோத்குமாரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.




வேட்புமனு தாக்கல் நிகழ்வின் போது பாஜக, பாமக உள்ளிட்ட அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பலர் குவிந்திருந்து PRG அருண்குமாருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.




கவுண்டம்பாளையம் தொகுதி கோவை மாவட்டத்தில் முக்கியமான சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்தொகுதியில் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். வரவிருக்கும் நாட்களில் பிற கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




அதிமுக கூட்டணி இத்தொகுதியில் தனது வலிமையை நிரூபிக்க முயற்சிக்கும் நிலையில், PRG அருண்குமாரின் வேட்பு மனு தாக்கல் முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தல் பிரசாரம் இன்னும் சில நாட்களில் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...