பொள்ளாச்சி திஷா இன்டர்னேஷனல் பள்ளியில் தேசிய அளவிலான டேக் வின்டோ போட்டி: 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி அருகே உள்ள திஷா இன்டர்னேஷனல் மேல்நிலைப்பள்ளியில் CISCE பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான டேக் வின்டோ போட்டிகள் நடைபெற்றன. 13 மாநிலங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டியில் செயல்பட்டு வரும் திஷா இன்டர்னேஷனல் மேல்நிலைப்பள்ளியில் CISCE பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான டேக் வின்டோ போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், பீகார், ஒடிசா, பாண்டிச்சேரி உள்ளிட்ட 13 மாநிலங்களின் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகள் 14, 17, 19 வயதினருக்கு தனித்தனியாக 69 பிரிவுகளில் நாக்-அவுட் முறையில் நடைபெற்றன. முதல் முறையாக சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் செயல்படுத்தப்படும் PSS முறையில் சென்சார் மூலம் பதிவு செய்யப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.



இப்போட்டிகளில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெறும் மாணவ, மாணவிகள் மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து டேக் வின்டோ பயிற்சியாளர் கோதண்டன் கூறுகையில், "இப்போட்டிகள் மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் தன்னம்பிக்கையையும் வளர்க்கின்றன. சர்வதேச தரத்திலான போட்டிகளில் பங்கேற்பதற்கு இது ஒரு சிறந்த தளமாக அமைகிறது," என்றார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...