தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 10, 2024 அன்று ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சிக் கட்டணம் ரூ.900.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை "ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள்" குறித்த ஒரு நாள் பயிற்சியை செப்டம்பர் 10, 2024 அன்று நடத்துகிறது.

இந்தப் பயிற்சியில் ஒட்டுண்ணி வகைகள், ஊண் விழுங்கிகள் / இரை விழுங்கிகள், நெல் அந்துப்பூச்சி வளர்ப்பு முறை, டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி வளர்ப்பு, புழு ஒட்டுண்ணி வளர்ப்பு, கண்ணாடி இறக்கைப் பூச்சி வளர்த்தல், பொறிவண்டு வளர்ப்பு, பப்பாளி மாவுப்பூச்சி ஒட்டுண்ணி அசரோபகஸ் வளர்ப்பு மற்றும் பயிர் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் பயன்பாடு ஆகியவை பற்றி விரிவாக விளக்கப்படும்.

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் அன்றைய தினம் காலை 9.00 மணிக்குள் பூச்சியியல் துறைக்கு வந்து சேர வேண்டும். பயிற்சிக் கட்டணமாக ரூ.900 நேரடியாக பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். பயிற்சி காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். பயிற்சியின் முடிவில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் - 641 003 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 0422-6611214, 6611414. மின்னஞ்சல்: [email protected].

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...