விசைத்தறி தொழிலை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது- மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி


விசைத்தறி தொழிலை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என கோவையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

விசைத்தறி மற்றும் ஜவுளிதுறையினை மேம்படுத்துவது தொடர்பாக பாராளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்ருமிதி இராணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய ஜவுளித்துறை செயலர் கவிதா குப்தா, ஜவுளித்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தினைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறுகையில், மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் அடுத்த பட்ஜெட் கூட்டத்திற்கு முன்பு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் அறிவுரைக்கேற்ப விசைத்தறி மேம்பாட்டிற்காக கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "பவர் டெக்ஸ் இந்தியா" திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோலார் மின் திட்டம் மூலம் பொதுப்பிரிவினருக்கு 50 சதவிகிதம் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 75 முதல் 90 சதவிகிதம் வரையும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 

விசைத்தறியாளர்கள், மத்திய அரசின் மானியம் மற்றும் நலத்திட்டங்கள் உள்ளிட்ட தொழில் சார்ந்த உதவிகளை பெற பிரத்யேகமாக 1800 222 017 என்ற அலைப்பேசி தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலுக்கு கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 162 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய ஜவுளித்துறைச் செயலர் கவிதா குப்தா பேட்டியளிக்கையில், 

சர்வதேச சந்தையில் இந்திய ஜவுளித்துறையினரின் பலத்தை நிரூபிக்கும் வகையில் வருகிற ஜூன் 13-ம் தேதியிலிருந்து ஜூலை 2-ம் தேதி வரை குஜராத்தில் மிகப்பெரிய ஜவுளிக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. அதில் தனியாக அரங்கு அமைக்க திருப்பூர் தொழில்துறையினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து பரிசீலிக்கப்படும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பவர் டேக்ஸ் இந்தியா திட்டத்தின் கீழ் வரும் பருத்தி வங்கி திட்டத்தின் மூலம் 11 நபர்கள் குழுவாக இணைந்து பருத்தியை கொள்முதல் செய்வதற்கு சுமார் 2 கோடி ரூபாய் மத்திய அரசால் கடன் வழங்கப்படுகிறது. பருத்தி விலையால் பாதிக்கப்படும் விசைத்தறியாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். 

மேலும் கடந்தாண்டு ஜவுளித்துறையின் ஏற்றுமதி 40 பில்லியன் டாலர்ஸ். அதில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி சற்று அதிகரித்துள்ளது" என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...