உடுமலை அருகே ஆலம்பாளையம் குளத்திற்கு நீர் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலம்பாளையத்தில் உள்ள பூசாரி நாயக்கன் குளத்திற்கு நீர் வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மூன்று ஆண்டுகளாக வறண்டுள்ள குளத்தால் சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலம்பாளையத்தில் 76 ஏக்கர் பரப்பளவில் பூசாரி நாயக்கன் குளம் அமைந்துள்ளது. இந்த குளம் 10 அடி நீர்மட்டமும், 24.67 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டுள்ளது. சுற்றுப்புறத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் போர்வெல்களுக்கு நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் இந்த குளம் உள்ளது.

நேரடியாக 88.56 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் இந்த குளத்தின் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றன. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மானுப்பட்டி கிளை கால்வாயில் உள்ள 2.65 மடை வாயிலாக குளத்துக்கு நீர் வழங்கப்பட்டு வந்தது.



ஆனால், கடந்தாண்டு ஏற்பட்ட வறட்சி மற்றும் குளறுபடி காரணமாக குளத்துக்கு நீர் வழங்கப்படவில்லை. இதனால் மூன்று ஆண்டுகளாக குளம் வறண்டு காணப்படுவதோடு, சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டு, தென்னை உள்ளிட்ட நிலைப் பயிர்களும் காய்ந்து வருகின்றன.

தற்போது, பிஏபி திட்ட தொகுப்பு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணையின் தற்போதைய நீர்மட்டம் மொத்த 60 அடியில் 53.75 அடியாக உள்ளது. இந்நிலையில், பாரம்பரிய உரிமை அடிப்படையில் ஆலம்பாளையத்தில் உள்ள பூசாரி நாய்க்கன் குளத்துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...