முறைகேடாக பணி பெற்ற 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை: அண்ணா பல்கலை அதிரடி நடவடிக்கை

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முறைகேடாக பணியில் சேர்ந்த 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 295 தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.


அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் முறைகேடாக பணியில் சேர்ந்த பேராசிரியர்கள் விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் குறித்து ஒரு தனியார் அமைப்பு முதலில் தகவல் வெளியிட்டது. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர்களின் விவரங்களை ஆய்வு செய்து, முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களின் தகவல்களை சேகரித்தது.

இந்த விவகாரம் பெரிதாகவே, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

போலி பேராசிரியர்கள் விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 295 தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட சுமார் 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு சிண்டிகேட் நிர்வாகிகளும் ஒப்புதல் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...