விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி பழங்குடி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை ஆனைக்கட்டி அருகே உள்ள 5 பழங்குடி கிராமங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வேண்டி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தங்கள் கிராமங்களிலேயே சிலை வைக்க அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.



Coimbatore: கோவை ஆனைக்கட்டி பகுதியில் உள்ள பழங்குடி கிராமங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்க வேண்டுமென பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் இந்து அமைப்பினர், அரசியல் கட்சியினர் மற்றும் ஊர் மக்கள் என பலரும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்து, நீர் நிலைகளில் கரைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது.

கோவை ஆனைக்கட்டி அருகே உள்ள தூமனூர், கண்டிவழி, ஜம்புகண்டி, கொண்டனூர் உள்ளிட்ட 5 பழங்குடி கிராமங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பழங்குடி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது, ஒவ்வொரு முறையும் அருகே உள்ள கிராமங்களில் சென்று வழிபாடு செய்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதாகவும், இந்த முறை தங்களது கிராமங்களிலேயே சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என காவல் நிலையத்தில் அனுமதி கேட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற கூறியதால் மனு அளித்துள்ளதாகவும் அவர்கள் விளக்கமளித்தனர்.

Newsletter

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...