தாராபுரம் அருகே ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சிப் பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார். சாலைப் பணிகள், அலுவலகக் கட்டிடம், நியாய விலைக் கடை உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் இதில் அடங்கும்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார். அதேசமயம், முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

மூலனூர் ஊராட்சி ஒன்றியம் தூரம்பாடி ஊராட்சி குழந்தை கவுண்டன் வலசு பகுதியில் புதிய தார் சாலை அமைத்தல், நத்தப்பாளையத்தில் ஊராட்சி அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகியவை இந்த நிகழ்வில் நடைபெற்றன.



எரசனம்பாளையம், உத்தம கவுண்டம்பாளையம் பகுதியில் பழைய தார் சாலையை புதிய தார் சாலையாக புதுப்பிக்கும் பணியையும், அதே பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நியாய விலைக் கடையையும் அமைச்சர் திறந்து வைத்தார். மேலும், குமாரபாளையம் ஊராட்சி ராமபட்டணம் சாலை புதுப்பித்தல், ராசிபாளையம் சாலை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளும் தொடங்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாபன், மாநில விளையாட்டு மேம்பாட்டுத்துறை துணைச் செயலாளர் கார்த்தி, மூலனூர் ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு மற்றும் பழனிச்சாமி, மூலனூர் பேரூர் கழகச் செயலாளர் மக்கள் தண்டபாணி, கன்னிவாடி பேரூராட்சி செயலாளர் சுரேஷ், தூரம்பாடி திமுக செயலாளர் மோகன்ராஜ், குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...