கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கோவையில் ஹோமியோபதி மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் ஹோமியோபதி மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தினர்.



Coimbatore: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கேட்டும், குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கோவை மாவட்ட ஹோமியோபதி மருத்துவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் பங்கேற்றனர்.



ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்கள் கருப்பு உடை அணிந்து கண்டன பதாகைகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், நாட்டில் மருத்துவர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



இந்த ஆர்ப்பாட்டம் மூலம், கொல்கத்தாவில் நடந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிரான தங்களது கண்டனத்தை தெரிவித்த ஹோமியோபதி மருத்துவர்கள், மருத்துவர்களின் பாதுகாப்பிற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...