கோவை துடியலூரில் இன்று முதல் பிரம்மாண்ட துபாய் சிட்டி பொருட்காட்சி தொடக்கம்..!

கோவை துடியலூரில் இன்று முதல் பிரம்மாண்ட துபாய் சிட்டி பொருட்காட்சி நடைபெறவுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் இந்த கண்காட்சியில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும்.


Coimbatore: கோவை துடியலூர் பகுதியில் பிரம்மாண்ட துபாய் சிட்டி எனும் பொருட்காட்சி இன்று (ஆகஸ்ட் 15 ) முதல் நடைபெற உள்ளது. வி.ஜி. மருத்துவமனை அருகில் உள்ள ரிலையன்ஸ் ஸ்மார்ட் எதிரில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்காட்சியில் துபாய் சிட்டியில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ளிட்ட பிரத்யேக மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அதிசயங்களை தத்ரூபமாக உருவாக்கி, மின் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளது.



கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான துரை, பங்குதாரர் இஸ்மாயில், ஜியாவுல் ஹக் ஆகியோர் கூறுகையில், "துபாய் நாட்டை நேரில் பார்க்காதவர்கள் பொருட்காட்சிக்கு வந்தால் துபாய் நகரில் உள்ளதை நேரில் காண்பது போன்று அனுபவத்தை பெறுவார்கள்" என்றனர்.

இந்த பொருட்காட்சியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், பிரம்மாண்ட ராட்டினம், உணவு அரங்கங்கள், ஸ்னோ வேர்ல்ட், பேய் வீடு, 3D கண்காட்சி அரங்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

டி.டி. எண்டர்டெயின்மண்ட் சார்பாக நடத்தப்படும் இந்த துபாய் சிட்டி பொருட்காட்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. கோவை வாழ் மக்களுக்கு இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு கண்காட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...