கோவையில் 'தாரங் சக்தி 2024' பன்னாட்டு விமானப்படை கூட்டு பயிற்சி நிறைவு - தமிழக ஆளுநர் பங்கேற்பு

கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் 8 நாட்கள் நடைபெற்ற 'தாரங் சக்தி 2024' பன்னாட்டு விமானப்படை கூட்டு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


கோவை: கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வந்த 'தாரங் சக்தி 2024' எனும் பன்னாட்டு விமானப்படை கூட்டு பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமானப்படையினர் இணைந்து கோவையில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் கூட்டு விமான பயிற்சி மேற்கொண்டனர். நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய விமானப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



தொடர்ந்து நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில், இந்திய விமான படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள், தேஜஸ், சுக்காய், மிக் ஆகிய போர் விமானங்களில் வீரர்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர்.



ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டைபூன் ரக போர் விமானம் மற்றும் ரபேல் ஆகிய விமானங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றன.

நிகழ்ச்சியின் நிறைவில், கூட்டு விமான பயிற்சியில் பங்கேற்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த விமானப்படை தளபதிகளுக்கு நினைவு பரிசுகளை ஆளுநர் வழங்கி கெளரவித்தார்.



முன்னதாக, விமானப்படைதள வளாகத்தில் நேற்று தொடங்கிய ராணுவ தளவாடங்கள் கண்காட்சியை ஆளுநர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.



இந்த கண்காட்சியில் மொத்தம் 62 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பொதுத்துறை மற்றும் தனியார் உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு அதிநவீன தளவாட தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...