நாளை பந்த்: எது இயங்கும்? எது இயங்காது?


விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

யாரெல்லாம் ஆதரவு:

திமுக அழைப்பு விடுத்துள்ள இந்த பந்த்திற்கு காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆட்டோக்கள் ஓடாது என்று சிஐடியு அறிவித்துள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் வாசன் அறிவித்துள்ளார். பாமக-வும் ஆதரவளிக்கவில்லை.  வணிகர் சங்கங்கள் ஆதரவு தருவதாக அறிவித்துள்ளன. இதனால் கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருக்கும். சினிமா தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளனர். சென்னை, கோவையில் ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல் இயங்கும்:

தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடுவார்கள் என பெட்ரோலிய பொருட்கள் வணிகர் சங்கத் தலைவர் முரளி அறிவிப்பு.

ஆளும் கட்சியைச் சேர்ந்த போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தினரைக் கொண்டு பாதுகாப்பான முறையில் பேருந்துகளை வழக்கம் போல் இயக்க அரசு முடிவு செய்துள்ளது.

போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்குவதற்காக ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் மட்டும் 13,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...