கோவையில் நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்

கோவையில் நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் சு. முத்துசாமி தொடங்கி வைத்தார். மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக ஆறு மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுமக்களுக்கு நெகிழி பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 6) தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் சு. முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உடனிருந்தார்.

இந்த பிரச்சார வாகனங்கள் "பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு" என்ற நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, "பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பையை உபயோகப்படுத்துவோம்" என்ற முழக்கத்துடன் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.



இந்த பிரச்சார வாகனங்களில் சிறப்பு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பொதுமக்களுக்கு நெகிழி பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாசு கட்டுப்பாட்டை மேலும் வலியுறுத்தும் வகையில், இந்த பிரச்சார வாகனங்கள் அனைத்தும் முழுவதும் மின்சார வாகனங்களாக உள்ளன.

பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, அதற்கு பதிலாக காகிதம் மற்றும் துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த பிரச்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...