'புத்தகம் வந்த பின்தான் குரங்கிலிருந்து மனிதன் வெளிப்பட்டான்' உலக புத்தக தின விழாவில் -மரபின் மைந்தன் முத்தையா பேச்சு

உலக புத்தக தினமான இன்று கோவை ஏ.டி.டி காலனி பகுதியில் உள்ள 'தி இந்து' நாளிதழ் அலுவலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. 



உலக புத்தக தினத்தையொட்டி தி இந்து-வின் பதிப்பு புத்தகங்கள் 50 சதவிகிதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று புத்தகங்களை வாங்கிச் சென்றனர். விழாவில் மரபின் மைந்தன் முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

அப்போது, வாசகர்களிடையே அவர் பேசுகையில், 'குழந்தைகளுக்கு நூல்களை கண்ணில் காட்டுங்கள், அவர்கள் படிக்க மாட்டார்கள் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டாம். புத்தகத்தை வாசிக்க தொடங்கிய பின்னர்தான் குரங்கிலிருந்து மனிதன் வெளிப்படத் தொடங்கினான். ஒவ்வொரு புத்தகத்தையும் உங்கள் வீடுகளில் குடியேற்றும் போதும்தான் ஒரு அறிஞரை உங்கள் வீட்டுக்கு குடியேற்றுவதாக அர்த்தம்' என்றார்.

 

இவ்விழாவில் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் சரவணன் மற்றும் 'தி இந்து' நாளிதழின் துணை மண்டல மேலாளர் ஜெகதீஸ்குமார், கோவை புத்தக திருவிழா குழுவினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...