பொள்ளாச்சி நகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம் - நகர மன்ற தலைவர் வீடு வீடாக ஆய்வு

பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதி கிருஷ்ணன் குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Coimbatore: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி நகர பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

இன்று நகராட்சிக்கு உட்பட்ட குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார். வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் தேங்கி புழுக்கள் உள்ளதா என்பது குறித்தும், வீடுகளை சுற்றியும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.

நகராட்சி முழுவதும் 80க்கும் மேற்பட்ட டெங்கு தடுப்பு ஊழியர்கள் வீடு வீடாக சென்று டெங்குவை பரப்பும் புழுக்களை மருந்து தெளித்து அழித்து வருவதாகவும், நிலவேம்பு கசாயம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் நகரமன்ற தலைவர் தெரிவித்தார். டெங்கு இல்லாத நகரமாக பொள்ளாச்சியை மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது நகர மன்ற உறுப்பினர்கள் நாகராஜ், கவிதா, துரைபாய் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...