கோட்டூர் ரெயின்போ காலனி அருகே குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் இறங்கிய பள்ளி வாகனம்

கோட்டூரில் குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பள்ளி வாகனம் இறங்கியது. பொதுமக்கள் உதவியுடன் மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பேரூராட்சியில் 2.0 குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோட்டூர் ரெயின்போ காலனி அருகே இத்திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழியில் பள்ளி வாகனம் இறங்கிய சம்பவம் நடந்துள்ளது.

கோட்டூர் பேரூராட்சியின் 21 வார்டுகளில் 2.0 குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல இடங்களில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜூலை 25 ஆம் தேதி காலை, கோட்டூர் ரெயின்போ காலனி அருகே ஆர்.கே.ஆர் ஞானோதயா மேல்நிலைப்பள்ளியின் வாகனம் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. திருப்பத்தில் திரும்பும்போது, குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிக்குள் வாகனத்தின் பின் சக்கரம் மாட்டி, இடது புறமாக சாய்ந்தது.

இச்சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் பயத்துடன் அலறினர். அவர்களின் சத்தம் கேட்டு உடனடியாக வந்த அக்கம்பக்கத்தினர் மாணவர்களை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், பொதுமக்களின் உதவியுடன் பள்ளி வாகனமும் குழியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் தொடர் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...