அட்டகட்டியில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது

வால்பாறை வட்டம், அட்டகட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக ஒவ்வொறு துறை தொடர்பாக பொதுமக்கள் அரிந்திடும் வகையில் கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். 



முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர், கோவை மாவட்ட தொழிலாளர் துணை ஆணையர், வால்பாறை காவல் துணை கண்காணிப்பாளர், கோவை மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குநர், கோவை வேளாண்மை துறை மற்றும் தோட்ட கலைத்துறை இணை இயக்குநர், வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர், வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர்,



முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட மாற்றுத்திரணாளிகள் நல அலுவலர், சமூக நல அலுவலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், பிற்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலர், தனித்துணை ஆட்சியர், வால்பாறை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர், வால்பாறை காவல் ஆய்வாளர், வால்பாறை வட்டாட்சியர் பாஸ்கரன் உள்ளிட்ட பல்வேறு துறையினைச் சார்ந்த அலுவலர்கள், அதிகாரிகள் இம்முகாமில் பங்கேற்றனர்.



இதில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் வரவேற்புரை ஆற்றினார். இதனைத்தொடர்ந்து, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு சிறப்புரை ஆற்றினார். வருவாய்த்துறை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையுரை ஆற்றி அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.



முகாமில் பழங்குடியின மக்களுக்கு சான்றுகள், மின்னணு குடும்ப அட்டை மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. முகாமின் இறுதியில் வால்பறை வட்டாட்சியர் நன்றியுரை ஆற்றினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...